2981. சுட்டதிரு நீறுபூசித் தொந்தோமென் றாடுவார்க்குத்
தோன்றுதலை மாலையணி தோள்விளங்க வருவார்க்குப்
பிட்டுக்காசைப் பட்டுமாறன் பிரம்படி பட்டவர்க்குப்
பிள்ளைக்கறிக் காசைகொண்ட கள்ளத்தவ வேடவருக்கு ( தெண்ட )
உரை: சுட்ட திருநீறு - வெந்த சாம்பலாகிய வெண்ணீறு. தலை மாலை - செத்த தேவர்களின் தலைகளைக்கோத்த மாலை. பிட்டு - மதுரையில் வந்தி யென்பவள் சுட்டு விற்ற பிட்டு. மாறன் - பாண்டியன். கள்ளத் தவ வேடம் - வடபுலத்துப் பயிரவர் கொண்ட வேடம். தவ வேடம் - துறவுக்கோலம். (3)
|