2984.

     பாட்டுக்காசைப் பட்டுமுன்னம் பரவைதன் வாயிலிற்போய்ம்
          பண்புரைத்துத் தூதனென்றே பட்டங்கட்டிக் கொண்டவர்க்கு
     வீட்டுக்காசைப் படுவாரை வீட்டைவிட்டுத் துரத்தியே
          வேட்டாண்டி யாயுலகில் ஓட்டாண்டி யாக்குவார்க்கு ( தெண்ட )

உரை:

     பாட்டு - சுந்தரர் பாடிய தேவாரப் பாட்டு. பரவை - திருவாரூர்ப் பரவை நாச்சியார். பண்பு - நற்பண்புகள். பட்டம்கட்டிக் கொண்டவர். பெயரைப் பெற்றவர். வீடு - முன்னது முத்தி வீடு; பின்னது மண்ணுலகில் குடி செய்து வாழும் வீடு. வேட்டாண்டி - மன்மத வேளின் காமவேளியைக் கடந்தவர். வேள்தாண்டி - வேட்டாண்டியென வந்தது. ஓட்டாண்டி - கையில் ஓடு ஏந்தித் திரியும்; பிச்சைக்காரன் சந்நியாசியுமாம்.

     (6)