2992.

     கொண்டு குலம்பேசுவ ருண்டோ வுலகிலெங்கள்
     குருவே - குருவே - குருவேயென் றலறவும் ( இன்னந் )
     
     இன்னந் தயவுவர விலையா - உனக்கென்மீதில்
     என்ன வர்மஞ் சொலையா.

உரை:

     கொள்வதற்கு முன்பு குலமும் குணமும் பேசுவது உலகியல்பு. “குணம் பேசிக் குலம் பேசிப் பைந்தொடியை மணம் நேர்ந்தார்” (திருநாவுக். 24) எனச் சேக்கிழார் உரைப்பது காண்க.

     (6)