3465.

     உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ
          துள்ளகம் நடுங்கினேன் பலகால்
     கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ
          தையவோ கலங்கினேன் கருத்தில்
     புரத்திலே அம்மா அப்பனே ஐயோ
          எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
     தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம்
          தந்தைநீ அறிந்தது தானே.

உரை:

     எந்தையாகிய ஈசனே, வலி மிக்கவர் எளியவர் செய்த தவற்றுக்காக அடித்த போது நான் கண்டு மனத்திற் கொண்ட கலக்கத்தைத் தெளிவான சொற்களால் உரைக்க முடியாதவனாக வுள்ளேன்; இதனை தேவரீருடைய திருவுள்ளம் நன்கறியும்; கள்ளுண்டவரைக் கண்டு நான் பயந்ததுண்டு; அது கடலினும் பெரிதாகும்; இரங்கத் தக்க மெலியவர்க்குக் கொடியவர்கள் செய்த வெவ்விய கொடுமையை அறிந்த போது என் மனம் கொண்ட நடுக்கத்தை யாவராற் சொல்ல முடியும். எ.று.

     எளியர் - மெய் வலியும் பொருள் வலியும் இல்லாதவர். மனத்தில் உண்டாகும் அளவிறந்த கலக்கம் மெய்வலியைச் சிதைப்பதால் “தெளிய நானுரைக்க வல்லவனல்லேன்” எனவும், தமது உரையின் மெய்ம்மையை வலியுறுத்த “திருவுளம் அறியுமே” எனவும் உரைக்கின்றார். களியர் - கள்ளுண்பவர். அச்சத்தின் பெருமையை யுணர்த்தற்கு “என் பயம் தான் கடலினும் பெரியது கண்டாய்” என்று கூறுகின்றார். அளியர் - கண்டார் இரங்கத் தக்க மெலிவுற்றவர். வெங்கொடுமை பொறுக்க மாட்டாத வெவ்விய தீமை.

     இதனால், எளியவர் அளியர் முதலாயினோர்க்குத் தீயவர் செய்யும் தீமை கண்டு அஞ்சிய திறம் தெரிவித்தவாறாம்.

     (54)