3562.

     அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி
          ஆடிய சிறுபரு வத்தே
     குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட
          குணப்பெருங் குன்றமே குருவே
     செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம்
          சிந்தையில் இனிக்கின்ற தேனே
     நற்றக வுடைய நாதனே உனையே
          நம்பினேன் கைவிடேல் எனையே.

உரை:

     தீங்கு செய்யும் காட்டில் வாழும் விலங்குகளாகிய காட்டுப் பன்றிகளைத் தூய மக்கள் உருவில் ஆக்கிய இரக்கச் சித்தத்தை யுடையவனே; மெய்ம்மை சான்ற ஞான சபைக்குத் தலைவனே; உயிர்கட்கு எல்லாம் நாயகனே; அழகிய கால்கள் இருந்தும் நடப்பதற்கு வலி யில்லாமையால் வருந்துகின்றவர்களைப் போல உள்ளத்தில் எழுந்தளுகின்ற நின் திருவடி யிருந்தும் திருவருள் நலம் எய்தும் விருப்பமின்மையால் நான் மிகவும் மெலிந்து ஒழிந்தேன்; ஆயினும், உன்னையே நம்பியுள்ளேனாதலால் என்னைக் கைவிடுதல் கூடாது. எ.று.

     கொடிய விலங்குகளும் பிற உயிர்களும் முள்ளுடைய மரம் செடி கொடிகளும் நிறைந்து இயங்குவார்க்கு ஆற்றாத் தீமை செய்தலால், காட்டைத் “தீயகான்” என்றும், அங்கு வாழ்ந்த காட்டுப் பன்றியின் குட்டிகளை மக்கள் உருவினவாக்கிப் பாண்டி மன்னனுக்கு மந்திரிகளாக்கி மாண்புறுவித்த திருவிளையாடலை எடுத்தோதிப் புகழ்கின்றாராதலால். “விலங்கைத் தூய மானிடஞ்செய் சித்தனே” என்றும் பராவுகின்றார். தில்லையம்பலம் மெய்மை சான்ற ஞான சபையாதல் பற்றிச் “சத்திய சபை” எனப்படுகிறது. உயிர்க்குயிராய் நின்று உணர்வு நல்கும் பெருமானாதலால், “உயிர்க்கு நாயகா” என்று கூறுகின்றார். உண்மேய கால் - நினைப்பவர் நெஞ்சினுள் நின்றருளும் திருவடி. இறைவன் திருவடி உள்ளத்தில் எழுந்தருளுவது அறிந்தும் அத்திருவடி ஞானத்தால் திருவருட் செல்வத்தைப் பெற முயலாமை நினைந்து வருந்துகின்றாராதலின், “திருவருள் உறவோர் விருப்பிலாமையின் மிக மெலிந்தேன்” எனத் தெரிவிக்கின்றார்.

     இதனால் திருவருள் நலம் பெற முயலாது ஒழிந்த சிறுமை கூறி விண்ணப்பித்தவாறாம்.

     (9)