3719.

     அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
          அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
     கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
          குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்ே­த இருந்ே­தன்
     படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
          படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்ே­த
     மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
          மனம்அலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.

உரை:

     மன்றில் நடம் புரிகின்ற அருளரசே! திருவடியே பொருளாகக் கொண்டு ஓதுகின்ற வேதங்களால் காணப்படாத திருவருள் ஞான வடிவைக் காட்டி நம்மை ஆண்டு கொண்ட குருமணியாகிய சிவ பரம்பொருளை அறிந்து கூடிக் கொள்ளும் வரை வேறு பொருளிற் கருத்தின்றி ஒன்றியிருப்போம் எனக் கருத்திற் கொண்டு மனையின்கண் ஒரு புறத்ே­த ஒடுங்கி யிருந்த என்னை உலகியல் வாழ்வே பொருளாவது எனக்கருதி உறையும் பலரும் என்னைக் கண்டு பலப்பல பேச இங்கே என்னை ஈர்த்து உலகியலாகிய வெளியில் விடுத்து அலைத்து வருத்துகின்ற விதியை நினைந்து மனம் வருந்துகின்றது காண். எ.று.

     வைதிக ஞானத்தின் முடிவு இறைவன் திருவடிப் பேறாதலின் அவற்றை, “அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்” என உரைக்கின்றார். ஞானாசிரியன் திருவுருவம் அருள் வடிவமாதலின் குருமுதல்வனை, “கருணைக் கொடி பிடித்த குருமணி” என்றும், உலகியல் வாழ்வில் தோய்ந்து நிற்கும் மக்களை, “படி பிடித்த பலர்” என்றும் உரைக்கின்றார். படு வழக்கு - துன்பத்தில் ஈடுபடுத்தும் தீரா வழக்கு. வழிப்பறி செய்யும் கள்வர் வழிப்போக்கரை மடக்கி அவர்கள் மடியைப் பிடித்திழுத்து உள்ள பொருளைக் கவர்ந்து கொள்ளுதல் இயல்பாதலால், அது கொண்டு ஞான நெறியில் செல்லுகின்ற தம்மை மறித்து வருத்துகின்ற தலைவிதியை, “மடி பிடித்துப் பறிக்க வந்த விதி” எனப் பழித்துரைக்கின்றார்.

     இதனால், குருபரனாய் எழுந்தருளும் மூர்த்தத்தைச் சிறப்பித்துக் காட்டியவாறாம்.

     (10)