4067. . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . .
நாரா யணனு நான்முகனு நயந்து
வியக்க நிற்கின்றேன்
ஏரார் உலகில் இனி அடியேன் செய்யும்
பணியை இயம்புகவே.
உரை: திருமாலும் நான்முகனும் கண்டு வியந்து மகிழ இருக்கின்றேன்; ஆகவே அழகிய இவ்வுலகில் இனி அடியவனாகிய யான் செய்யும் பணியை உரைத்தருளுக. எ.று.
இவ்வருட்பாவின் முற்பகுதி சிதைந்து விட்டது. தமக்குக் கிடைத்தற்கரிய திருவருளின் நலம் வடலூர் வள்ளலார்க்கு எய்தியது கண்டு தேவதேவர்களும் வியக்கின்றமை தோன்ற, “நாராயணனும் நான்முகனும் நயந்து வியக்க நிற்கின்றேன்” என்று கூறுகின்றார். நன்ஞான ஒழுக்கத்திற்கும் நல்யோகப் பேற்றுக்கும் சிறந்து இடமாதல் விளங்க, “ஏரார் உலகு” என்று இயம்புகின்றார். (11)
|