4209. அம்பலத்ேத நடம்புரியும் எனதுதனித் தலைவர்
அன்புடன்என் உளங்கலந்ேத அருட்பெருஞ்சோ தியினால்
தம்பலத்ேத பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
எம்பலத்ேத மலரணையைப் புனைகஎனப் பலகால்
இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
செம்பலத்ேத உறுதருணம் வாய்மலர வேண்டும்
சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே.
உரை: சிற்சபையிலும் பொற்சபையிலும் ஓங்கித் திகழ்கின்ற பெருமைசான்ற கூத்தப் பெருமானே! அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்றவரும், என்னுடைய தனிப் பெருந் தலைவருமாகிய சிவபெருமான் மிக்க அன்புடன் போந்து என் மனத்துட் கலந்துகொண்டு தம்முடைய அருட்பெருஞ் சோதியாகிய சிவஞானத்தால், தம்பால் உளதாகிய பெரிய சிவபோகத்தை எனக்குத் தாராதொழியார்; இஃது உண்மை; முக்காலும் உண்மை; அதனால் அவர் என்பாற் போந்து என்னைக் கூடி இனிதிருத்தற் பொருட்டு எம்முடைய மனையின்கண் பூக்கள் நிறைத்த படுக்கையை அழகு செய்க என்று பன்முறையும் சொல்லுகின்றாள்; இவள் அளவில் நிகழ்ந்தது கூறுகின்றோம்; இனி நுமது திருவருளாகிய செவ்விய பயன் விளைதற்கமைந்த காலம் இதுவென உரைத்தருள வேண்டுகிறேன். எ.று.
அருட் பெருஞ் சோதி - திருவருட் சிவஞானம். அஃது ஒளி வடிவினதாகலின், இவ்வாறு ஓதப்படுகிறது. தம்பலம் - தம்பால் உளதாதலால் விளையும் பயன். சிவபோகம் பெறப்படுமோ என யாரும் அயிராமைப் பொருட்டு, “இதுதான் சத்தியம் சத்தியம்” என அடுக்கி யுரைத்துத் தலைவி வற்புறுத்துகின்றாள். அவர்தாம் என்னைச் சார்ந்திருக்க என இயைக்க. எம்பலம் - எம்பால். மனத்துள் இருக்கும் உறுதிப்பாட்டால் “பலகால் இயம்புகின்றாள்” என அறிக. இசைத்தும் - இயம்புகின்றோம். செம்பலம் - செவ்விய திருவருள் நலம். உறுதருணம் - போகம் தர எழுந்தருளும் காலம். தலைவன் எழுந்தருளும் காலத்தை, முன்னுணர்ந்து கொள்ளத் தோழி செய்யும் முயற்சி என அறிக. (10)
|