4278. சின்மய வெளியிடைத் தன்மய மாகித்
திகழும் பொதுநடம் நான்காணல் வேண்டும்
என்மய மாகி இருப்பாயோ தோழி
இச்சை மயமாய் இருப்பாயோ தோழி.
உரை: சின்மய வெளி - ஞானமயமாகிய ஆகாச வெளி. தன்மயமாதல் - சிவஞானமாதல். பொதுநடம் - ஞான சபையில் நிகழும் ஞான நடனம். என்மயமாதல் - எனக்கு ஒத்து இயலுதல். இச்சை உலகியலாசை. (3)
|