4281.

     வகார வெளியில் சிகார உருவாய்
          மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும்
     விகார உலகை வெறுப்பாயோ தோழி
          வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி.

உரை:

     வகார வெளி - சத்தியாகிய அருள் வெளி. சிகாரம் - சிவாகாரம். மகாரத் திருநடம் இன்பமயமான நடனம். மகரம் - சிகாவகரங்களாகிய இரண்டினாலும் நிரம்பும் இன்பம் என்பது உபதேசப் பகுதி (பக் - 62)

     (6)