4282. நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு
நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும்
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி
துட்டநெறியில் கெடுவாயோ தோழி.
உரை: நாதாந்த நிலை - நாதத்தை அநீதமாகவுடைய தத்துவ நிலை. போதாந்த நிலை - ஞானநூல் காட்டும் எல்லையாகிய ஞானப் பெருநிலை. தத்துவஞானத்துக்கும் சாத்திர ஞானத்துக்கும் நடுவாகிய ஞானநிலை, “நடுவாம் பொது” எனப்படுகிறது. தற்போதம் - தன்முனப்பென்னும் அகங்காரம். அது தீது செய்தலால் “சூதாம் தற்போதம்” எனத் தலைவி கூறுகிறாள். துட்ட நெறி - தீய நெறி. (7)
|