4284. என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில்
இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும்
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி
நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி.
உரை: தன்னோடு இருத்தும் பொதுவாவது சிவமாகிய தன்னோடே ஆன்மாவாகிய என்னைச் சிவமாக்கி உடனிருந்து சிவபோகம் துய்ப்பிக்கும் சிவஞானச் செல்வச்சபை. நின்னுடைய ஆன்மயறிவு வெறும் பசுபாச ஞானத்தோடு நின்றழிதல் கூடாதென்பாள், “நின்னைவிட்டு என்னோடே நிலைப்பாயோ தோழி” எனத் தலைவி கேட்கின்றாள். (9)
|