66. நெஞ்சொடு நேர்தல்
அஃதாவது, நெஞ்சினை முன்னிலைப் படுத்தி அறிவுரை பகர்தல்.
கலித்தாழிசை 4287. அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே
தொடங்குநாள் நல்லதன் றோ.
உரை: தோற்றக் கேடுகளில்லாத சிவ பரம்பொருளை “அடங்கு நாள் இல்லாது அமர்ந்தான்” எனவுரைக்கின்றார். அடங்குதல் - நடுங்குதல். (1)
|