4289.
காலங் கடந்த கடவுளைக் காணற்குக் காலங் கருதுவ தேன் - நெஞ்சே காலங் கருதுவ தேன்.
உரை:
கால தத்துவத்தைக் கடந்த வேறாய பரம்பொருளாதல் பற்றிச் சிவனை, “காலம் கடந்த கடவுள்” எனக் கூறுகின்றார். (3)
(3)