4293.

     என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
     உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
     உன்னுவ தென்னைகண் டாய்.

உரை:

     உயிர்க்குத் தலைவனாகிய சிவபெருமானைக் கண்டு பரவுவதற்கு வேறாயவற்றை எண்ணுவது கூடாது. உன்னுதல் - நினைத்தல்.

     (7)