67. அஞ்சாதே நெஞ்சே
சிந்து
அஃதாவது, உலகியல் வாழ்வில் வந்து தாக்கும் துன்பங்கட்கு அஞ்சுதல் நெஞ்சுக்கு இயல்பாதலால், அஞ்சுதல் வேண்டா எனத் தேற்றுகின்றார் என்பதாம். அச்சம் அறிவைச் சிதைத்துக் கீழ்மைப்படுத்தும் இயல்பினது எனத் திருவள்ளுவர் முதலிய சான்றோர் கூறுவர். 4297. அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
உரை: அஞ்சாதே - அஞ்ச வேண்டா. (1)
|