4299.

     துய்யர் அருட்பெருஞ் சோதியார் நம்முடை
     அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     துய்யர் - தூயவர். அருட்பெருஞ் சோதியார், திருவருளாகிய பெரிய ஞானவொளி யுருவானவர் என்றற்கு, “அருட் பெருஞ் சோதியார்” எனச் சிறப்பிக்கின்றார். யாரும் எப்போதும் எளிதிற் கண்டு வழிபடும் வண்ணம் அம்பலத்தில் எழுந்தருளுகின்றார் என்பது கருத்து.

     (3)