4300.

     மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை
     அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     மண்ணக வாழ்வு அறிவை மயக்கும் இயல்பினதாகலின், அதனால் நாம் மயங்கிக் கெடாதவாறு நன்ஞானவொளி தந்தருளுதற்காக, அம்பலத்தில் எழுந்தருளுகின்றார் என்பாராய், “மண்ணில் நமையாண்ட வள்ளலார்” என்றும், அவர் நமக்குத் தலைவர் என அறிவித்தற்கு, “நம்முடை அண்ணல்” என்றும் உரைக்கின்றார்.

     (4)