4304. தாண்டவ னார்என்னைத் தான்தடுத் தாட்கொண்ட
ஆண்டவ னார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை: தாண்டவனார் - அருட் கூத்தாடுபவர். மண்ணகப் பொருள் வாழ்வில் நினைவு செல்லாமல் தடுத்துத் திருவருள் ஞானவாழ்வில் செலுத்தியருளுதல் விளங்க, “தடுத்து ஆட்கொண்ட ஆண்டவனார்” என்று புகழ்கின்றார். (8)
|