4307. நம்மை ஆட்கொள்ள நடம்புரி வார்நம
தம்மையி னோடிதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை: அம்பலத்தில் ஆடல் புரிவது ஆன்மாக்களை உய்வித்தற் பொருட்டேயன்றி விளையாட்டின்பம் வேண்டியன்று என அறிவித்தற்காக, “நம்மை யாட்கொள்ள நடம் புரிவார்” என்று கூறுகின்றார். நமதம்மை - நமக்குத் தாயாகிய சிவகாமி. (11)
|