4308.

     தன்னைஒப் பார்சிற் சபைநடஞ் செய்கின்றார்.
     அன்னைஒப் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     தமக்குத் தாமே ஒப்பாவதன்றிப் பிறர் யாரும் தமக்கு ஒப்பாக இல்லாதவர் என்பார், “தன்னை யொப்பார்” என வுரைக்கின்றார். அன்னை - பெற்ற தாய். சிற்சபை - ஞான சபை.

     (12)