4309. பாடுகின் றார்க்கருட் பண்பினர் ஞானக்கூத்
தாடுகின் றார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை: தன்னை அன்பால் நினைந்துருகிப் பாடுபவர்களுக்கு இன்னருள் வழங்கும் இயன்பினன் இறைவன் என்பது பற்றி, “பாடுகின்றார்க்கு அருட்பண்பினர்” எனவும், உலகியல் இச்சையை விளைவிக்காமல், சிவஞான ஆனந்தத்தை விளைவிக்கும் திருக்கூத்து என்பது விளங்க, “ஞானக் கூத்தாடுகின்றார்” எனவும் இயம்புகின்றார். (13)
|