4311. நீளவல் லார்க்குமேல் நீளவல்லார் நம்மை
ஆளவல் லார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை: நீளவல்லார் - அண்டத்துக் கப்பாலும் நெடிது உயரவல்ல திருமால். அவராலும் நெடிது உயர்ந்து காணமாட்டாத நெடுமை யுடையவர் சிவபிரான் என்பாராய், “நீள வல்லார்க்கு மேல் நீள வல்லார்” என்று கூறுகின்றார். (15)
|