4312.

     இன்புடை யார்நம் இதயத் தமர்ந்தபே
     ரன்புடையார் இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     இதயம் - மனம். ஆன்மாக்களின் தூய மனத்தின்கண் எழுந்தருளுதற் கேதுவாகிய மிக்க அன்புடையவர் என்பது கருத்து.

     (16)