4313.

     உபய பதத்தைநம் உச்சிமேற் சூட்டிய
     அபயர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     உபய பதம், இரண்டாகிய திருவடி. அபயர் - அச்சத்தைப் போக்குபவர். அச்சம் கீழ்மையைத் தருவதாகலின், அஃது ஆன்மாக்கட்கு உண்டாகாமற் காப்பவர் என்பாராய், “அபயர்” என வடலூர் வள்ளல் அறிவிக்கின்றார்.

     (17)