4314. வேண்டுகொண் டார்என்னை மேல்நிலைக் கேற்றியே
ஆண்டுகொண் டார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே
உரை: வேண்டு - வேண்டுதல்; முதனிலைத் தொழிற் பெயர். முறை வேண்டியும் குறை வேண்டியும் விண்ணப்பித்தல் “வேண்டு” எனப்படுகிறது. மேலாகிய சிவயோகஞான நிலைகளையே தம் மனம் விரும்பச் செய்வது பற்றி, “மேல் நிலைக்கேற்றி ஆண்டு கொண்டார்” எனவும், மேல் நிலை வேட்கை குன்றாதவாறு காக்குமாறு விளங்க, “ஆண்டு கொண்டார்” எனவும் அறிவிக்கின்றார். (18)
|