4315.

     எச்சம்பெ றேல்மக னேஎன்றென் னுள்உற்ற
     அச்சம் தவிர்த்தவர் அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     எச்சம் - குறை. எச்சம் உலகியற் புகழாகக் கொண்டு, எச்சம் பெறல்வேண்டி ஞானப்பேற்றைக் கைவிடலாகாது என்றற்கு, “மகனே, எச்சம் பெறேல்” என இயம்புகின்றார் என வுரைப்பினும் அமையும். உள்ளுற்ற அச்சம் - உள்ளத்தில் பொருந்தும் அச்சம்.

     (19)