4318.

     விரசுல கெல்லாம் விரித்தைந் தொழில்தரும்
     அரசுடை யார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே

உரை:

     விரசுலகு, நிலம் முதல் பூதமைந்தும் கலந்த உலகம். ஐந்தொழில், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்கள்.

     (22)