4319.

     செறிவுடை யார்உளத் தேநடஞ் செய்கின்ற
     அறிவுரு வார்இதோ அம்பலத் திருக்கின்றார்
     
     
               அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே
               அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே.
     

உரை:

     செறிவு - நிறைவு. எல்லாப் பொருளிலும் உயிர்களிலும் குறைவற நிறைந்திருத்தல். உளம் - மனம். அறிவுருவார் - ஞானமே உருவாக வுடையவர்.  

     (23)