கண
கண்ணிகள்
4321. பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்
நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம். ஆடிய
உரை: (4320 - 1) பாடிய வேதங்கள் - ஓதப்படுகின்ற வேதங்கள். வேதங்களை நன்கு ஓதியுணர்ந்த வைதிக ஞானத்துக்கும் எட்டாதவன் சிவபெருமான் என்பாராய், “வேதங்கள் தேடிய பாதம்” எனக் கூறுகின்றார். பத்தருள்ளத்தில் தேனூற நிற்பது பற்றித் “தித்திக்கும் பாதம்” என்று புகழ்கின்றார். பெரிய தவயோகியர் காண விரும்புதல் விளங்க, “நாடிய மாதவர்” என இயம்புகின்றார். நாத தத்துவத்துக்கு அப்பாலதாகிய பரவெளி “நாதாந்த நாடு” எனப்படுகிறது. மன்று - அம்பலம். (1)
|