4324.

     நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
          நாத முடிவில் நடிக்கின்ற பாதம்
     வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
          மந்திர யந்திர தந்திர பாதம். ஆடிய

உரை:

     நாதமுடிவு - நாதாந்தமாகிய ஞானப்பேரெல்லை. வேத மந்திரங்களாலும் ஆகமங்களாலும் சக்கர வகைகளாலும் போற்றப்படும் பாதம் என்றற்கு, “மந்திர தந்திர யந்திர பாதம்” என்று கூறுகின்றார். யந்திர வகைகளைத் திருமந்திரம் முதலிய நூல்களிற் காண்க.

     (4)