4325.

     எச்சம யத்தும் இலங்கிய பாதம்
          எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்
     அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம்
          ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம். ஆடிய

உரை:

     எல்லாச் சமயங்களும் வேறு வேறு பெயர் குறித்துப் போற்றுவது இறைவன் திருவடியே என்பதனால், “எச்சமயத்தும் இலங்கிய பாதம்” என்று கூறுகின்றார். ஆனந்த நாடு - அந்தமில் இன்பத்து அழிவில்லாத முத்தி நிலையாகிய வீடு பேறு. அதிபதி - பெருந்தலைவன்.

     (5)