4326.

     தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
          தெள்ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம்
     மூவரும் காணா முழுமுதற் பாதம்
          முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம். ஆடிய

உரை:

     மூவர், பிரமன் திருமால் உருத்திரன் என்ற தேவதேவர். முப் பாழ், மாயப் பாழ், வியோமப் பாழ், உபசாந்தப் பாழ்.

     (6)