4327.

     துரிய வெளிக்கே உரியபொற் பாதம்
          சுகமய மாகிய சுந்தரப் பாதம்
     பெரிய பொருளென்று பேசும் பொற்பாதம்
          பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம். ஆடிய

உரை:

     துரியவெளி - துரியநிலையில் இருந்து காணப்படும் சிவனாந்த நிலை. சுந்தரப்பாதம் - அழகிய திருவடி. சுந்தரம் - அழகு. பெரிய பொருள் - பிரமப்பொருள்.

     (7)