4330.

     ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம்
          அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
     கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்
          கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம். ஆடியa

உரை:

     ஐவண்ணம் - ஐவகை நிறம் : அவை - பொன்மை, வெண்மை, செம்மை, கருமை, நீலம் என வரும். கை வண்ண நெல்லிக் கனி - அங்கை நெல்லிக் கனி. கரதல ஆமலகம் எனவும் கூறுவர். புறக்காட்சிக்கும் அகக்காட்சிக்கும் பொருளாவது என்றற்கு, “கண்ணும் கருத்தும் கலந்த பொற்பாதம்” என்று போற்றுகின்றார்.

     (10)