4331. ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்
சத்திய ஞான தயாநிதி பாதம். ஆடிய
உரை: அண்டம் - பெரியது; பிண்டம் - சிறியது. சாருயிர் - சிவத்தை நினைந்தொழுகும் ஆன்மா. சத்திய ஞான தயாநிதி - மெய்ம்மை ஞான அருட்செல்வம். (11)
|