4332. தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கி னுள்ளே உறைகின்ற பாதம்
உண்மை விளங்க உரைத்தபொற் பாதம். ஆடிய
உரை: உயர்ந்தோங்கும் பரம்பொருளாய் என் சிறிய உள்ளத்தின்கண் எழுந்தருளுவது உணர்த்த, “ஓங்கி என்னுள்ளே உறைகின்ற பாதம்” என வுரைக்கின்றார். உண்மை - உண்மை ஞானம் குறித்து நின்றது. (12)
|