4333.

     எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
          இறவா நிலையில் இருத்திய பாதம்
     புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்
          பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம். ஆடிய

உரை:

     இறவா நிலை - சாகாப் பதம்; பிறவா நெறி எனினும் பொருந்தும். புண்ணியர் - சிவபுண்ணியத்தாற் சிறப்புற்ற ஞானவான்கள். பொய்யர் - பொய்ந்நினைவும் பொய்ச்சொல்லும் பொய்ச் செய்கையுமுடையவர்.

     (13)