4335.

     அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
          அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
     பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்
          பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம். ஆடிய

உரை:

     அருட் பெருஞ் சோதியது - திருவருள் ஞானமாகிய பெரிய ஒளியையுடையது. பொருள் வகைகளால் பெரிய இன்பத்தை உயிர்கள் பெறச் செய்யும் நலம் காரணமாக பொருட் பெரும் போகம் புணர்த்திய பாதம் என்று புகழ்கின்றார். மெய்ப்பொருளாகிய பெரிய சிவபோகத்தை, முத்தான்மாக்களை நுகர்விக்கும் திருவடி எனினும் பொருந்தும். சிவன் திருமேனி பொன்னிறமுடையதாகலின், திருவடியைப் பொன் வண்ணமாகிய புண்ணிய பாதம் என்று போற்றுகின்றார்.

     (15)