4339.

     எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை
     அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே அபயம்

உரை:

     எம்பலத்தால் - எங்கள் ஞான பலத்தால். ஏன்று கொளல் - ஏன்று ஆண்டருளுதல். ஞான வாழ்வால் ஆன்மா எய்தும் வன்மை நோக்கி, பேரின்ப வாழ்வு தருவதற்காகச் சிவன் அம்பலத்தில் ஆடுகின்றான் என்பது பற்றி, “எம்மை ஏன்று கொளத் தில்லையம்பலத்தாடும்” என்று கூறுகின்றார்.

     (3)