4340.
தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும் சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம்
உரை:
தவ சிதம்பரம் - தவ ஞானக் கடல். தன்மயமாய்ச் செய்தல் - சிவமாம் தன்மை பெறுவித்தல். சிவ சிதம்பர மகாதேவர் - சிவஞானமாகிய ஆகாசத்தில் எழுந்தருளும் தேவதேவர். (4)
(4)