4341.

     ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே
     என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம்

உரை:

     ஒன்றும் பதம் - ஆன்மாக்கள் சென்று கூடும் சிவபோக பதம். சிவபோக நிலையில் உயர்ந்தோங்கும் சிவ பரம்பொருளை, “உயர் பதத்திற்கு உயர் பொருள்” என வுரைக்கின்றார்.

     (5)