4342.

     வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின்
     றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்

உரை:

     வான் அந்தமாம் தில்லைமன்று - ஞானாகாயத்தை எல்லையாகவுடைய தில்லையம்பலம். ஆனந்தத் தாண்டவம் - ஆன்மாக்களுக்குப் பேரின்பம் விளைதல் வேண்டிச் செய்கின்ற திருக்கூத்து.

     (6)