4346.

     செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும்
     நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம்

உரை:

     செம்பொருள் - மெய்ப்பொருள். சிதம்பரமாகிய பொதுவின்கண் எழுந்தருளுகின்றாராயினும், அன்பர்களாகிய நமக்கு உரிமைப் பொருள் எனத் தெரிவித்தற்கு, “சிதம்பரத்தே என்றும் நம் பொருளான நடேசர்” என நவில்கின்றார். நடம் புரியும் ஈசர் என்பது “நடேசர்” என வந்தது.

     (10)