4347.

     வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த
     அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்

உரை:

     மாயை, கன்மம், மலம் என்ற மூன்றாலும் உண்டாகும் அச்சத்தை, “மாயை வினையாதியால் வந்த அச்சம்” என்று கூறுகின்றார். மயக்கம் செய்வது பற்றி, “வெச்சென்ற மாயை” என்கின்றார். வெச்சென்பது குறிப்பு மொழி.

     (11)