4349.

     மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப்
     பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்

உரை:

     மன்னம்பரம் - நிலைபெற்ற ஆகாசம். நிலமீறாகிய ஏனைப் பூதங்கள் தோன்றி யொடுங்கும் இடமாதலால், ஆகாயமாகிய பூதத்தை, “மன்னம் பரம்” என்று குறிக்கின்றார். அம்பரம் - ஆகாயம். பொன்னடி - அழகிய திருவடி. வடிவில் வடிவு - வடிவங்கட்கெல்லாம் மூல வடிவு.

     (13)