4350.

     நாத முடிவில் நடம்புரிந் தன்பர்க்குப்
     போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்

உரை:

     நாத முடிவு - நாத தத்துவத்தின் அந்தமாகிய மாயாதீதப் பெருவெளி. போதம் - சிவஞானம்.

     (14)