4351.

     உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான
     சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்

உரை:

     உச்சி தாழ்தல் - தலை சாய்த்து வணங்குதல். உறவோர் - அன்புறவு கொண்ட மெய்யடியார்கள். அவர்கள் சத்தும் சித்தும் ஆனந்தமும் ஆகிய மூன்றினுக்கும் உரிமையுடையவராதலால், “உறவான சச்சிதானந்தம்” என்று உரைக்கின்றார். தனிநடம் - ஒப்பற்ற நடனம். நடப்போது - நடனம் புரியும் திருவடி.

     (15)