4352. சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே
அபயம் அபயம் அபயம்
உரை: சித்தம், சிந்திக்கும் அந்தக் கரணம். சித்தம் சிந்திக்கும் இடம் மனத்தின் உள்ளிடமாதலால் அதனை, “உள்ளம்” என்கின்றார்; உள்ளமாவது உயிர் என்று கூறுவதுமுண்டு. “அறிவிக்க வன்றி யறியா வுளம்” (சிவ. போ.) என மெய்கண்டார் கூறுவது காண்க. (16)
|