4357. அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும்பெருஞ் சித்தரே வாரீர்
அற்புத ரேஇங்கு வாரீர். வாரீர்
உரை: அண்ட வகைகள் யாவற்றையும் ஓர் அணுவாக்கி ஒடுக்கியடக்கும் பேராற்றல் சிவனுக்கு உண்மை விளங்க, “அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும் அரும்பெருஞ் சித்தர்” என்று புகழ்கின்றார். சித்தர் - அணிமா, மகிமா முதலிய எண்வகைச் சித்துக்களைச் செய்பவர். (5)
|